logo

Login



சேலம் சிவதாபுரம் :- இட ஒதுக்கீட்டு போராட்டத் உயிர் நீத்த தியாகி சிவதாபுரம் குப்புசாமி

  • 2023-08-26
  • salem
event thumb
August

26

சேலம் சிவதாபுரம் :- இட ஒதுக்கீட்டு போராட்டத் உயிர் நீத்த தியாகி சிவதாபுரம் குப்புசாமி அவர்களின் இல்லம் சிவதாபுரம் மொரம்புக் காட்டில் உள்ளது. அவரின் ஓட்டு வீட்டை இடித்து விட்டு தமிழின போராளி மருத்துவர் அய்யா அவர்கள் தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களின் ஆணையின் பேரில் நான் (இரா.அருள் MLA மாநகர மாவட்ட செயலாளர்) வீடு கட்டும் பொறியாளரிடம் முன்பணம் வழங்கினோம். வருகின்ற செப்டம்பர் 17 தேதி அன்று பணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக வீட்டை இடிக்கும் பணி குறித்து நிர்வாகிகளுடன் சென்று ஆலோசனை செய்தோம் . உடன் மாநகர மாவட்ட தலைவர் கதிர். ராசரத்தினம், பசுமைத்தாக மாநில இணைப் பொதுச் செயலாளர் சத்ரிய சேகர் மற்றும் அப்பகுதியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் ...